திருப்பூர், டிச.7 - திருப்பூர் யூனியன் மில் சாலையில் இரு சக்கர வாக னம் மீது லாரி மோதியதில் பின்னாலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (30). இவர் திருப்பூர் கோல்டன் நகரில் அறை எடுத்துத் தங்கியிருந்து ஊத்துக்குளி சாலையில் உள்ள பின்ன லாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் பணிக்குச் செல்வ தற்காக இரு சக்கர வாகனத்தில் யூனியன் மில் சாலை யில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மணல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சந்தோஷின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சந்தோஷின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.