tamilnadu

இலவச கல்வி சட்டத்தில் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோரிடம் கூடுதல் கட்டணம் கேட்டு நிர்பந்திக்க கூடாது டிஇஓ அறிவுறுத்தல்

திருப்பூர், ஜூலை 16 - இலவச கல்வி உரிமைச் சட் டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை களின் பெற்றோரிடம் குன்னத்தூர் கொங்கு மெட்ரிக் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்து வந்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தையில் பள்ளி நிர் வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு நிர்பந்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. குன்னத்தூர் கொங்கு மெட்ரிக்  பள்ளியில் இலவச கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தில் சேர்க்கப் பட்ட குழந்தைகளின் பெற்றோர் பி. சுரேஷ்குமார் மற்றும் ரம்யா ஆகி யோர் ஊத்துக்குளி வட்டாரக் கல்வி அலுவலரிடம் கடந்த ஜூன் 12ஆம் தேதி புகார் கடிதம் கொடுத்தனர். இதில், இந்த  ஆண்டு பள்ளி துவங்கிய பின்பு தமது குழந்தைகள் எஸ்.ஆர்.நந்தனா  5ஆம் வகுப்பிற்கு கல்விக் கட்டண மாக ரூ.32,950-ல் அரசு வழங்கும் ரூ.7480 கழித்து ரூ.25,470 கட்ட  வேண்டுமென்றும், அதேபோல் 4 ஆம் வகுப்பு படிக்கும் சௌம்யா விற்கு கல்விக் கட்டணமாக ரூ. 31,000த்தில் அரசு வழங்கும் கல்விக் கட்டணம் ரூ.7480 கழித்து ரூ.23, 520 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த ஆண்டு கல்விக்கட்டண நிலுவைத் தொகையாக நந்தனா ரூ.10,230, சௌம்யாவிற்கு ரூ. 9,230 செலுத்த வேண்டும் என  நிர்ப்பந்தம் செய்வதாக கூறியிருந் தனர்.  இது போக புத்தகக் கட்டணம் ரூ.5920 மட்டும் செலுத்துவதாக கூறியதை ஏற்காமல், புத்தகமும் வழங்காமல் குழந்தைகளை பள்ளி  முதல்வர் பாரபட்சமாக நடத்து கிறார். எனவே இப்பள்ளி நிர்வா கத்தின் மீது நடவடிக்கை எடுத்து  குழந்தைகளின் கல்வி நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் ஆர்.குமார் உள் ளிட்டோரிடமும் நிர்வாகத்தார் அலட்சியமாக நடந்து கொண் டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடமும் கடிதம் அளிக்கப் பட்டது. எனினும் இப்பிரச்ச னையில் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
எம்.பி. பரிந்துரைக் கடிதம்
இந்நிலையில் மேற்படி பள்ளி பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காணுமாறு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் ஆட்சியருக்குப் பரிந்துரைக் கடிதம் அளித்தார். இக் கடிதத்துடன் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார்,  பெற்றோர் உள்ளிட்டோர் ஜூலை 15ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் தலையிட்டு இப்பிரச் சனையில் பேசி நடவடிக்கை எடுக்க  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி உத்தரவிட்டார். இதன்படி செவ்வாயன்று குன்னத்தூர் கொங்கு மெட்ரிக் பள்ளிக்குச் சென்ற மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகார் மனு குறித்து நிர்வா கத்தினரிடம் விசாரணை செய் தார். இதில் கல்வி உரிமைச் சட்டப் படி, குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இது  தவிர சீருடை, புத்தகங்கள் ஆகிய வற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய விபரத்தை பள்ளி அறி விப்புப் பலகையில் அறிக்கை வெளியிட வேண்டும். களச் சுற்று லாவுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக விருப்பமில்லாத குழந் தைகளின் பெற்றோரை கட்டாயப் படுத்தக் கூடாது. பள்ளி பேருந் தில் வர விரும்பாதவர்களை கட்டா யப்படுத்தவோ, பள்ளி பேருந்து கட்டணம் வசூலிக்கவோ கூடாது.  கல்வி உரிமைச் சட்டக் குழந்தை களிடம் பள்ளியில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று கல்வி அலு வலர் பழனிச்சாமி கூறினார். அவர் அறிவுறுத்திய அடிப் படையில் கட்டணம் செலுத்த வேண்டிய விபரங்கள் பள்ளி அறி விப்புப் பலகையில் வெளியிடப் பட்டதாகவும், கூடுதல் கட்ட ணங்கள் வசூலிக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதர சீருடை, புத்தக கட்டணங்கள் செலுத்துவது பற்றி தெளிவாக தெரிவிக்கப்பட்ட விப ரங்களை பெற்றோரும் ஏற்றுக்  கொண்டனர். கூடுதல் கட்டணம்  செலுத்த நிர்ப்பந்தம் செலுத்தப் படாது என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில் இப்பிரச்சனை சுமூக மாக தீர்க்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.