tamilnadu

முடங்கிக் கிடக்கும் திருப்பூர் துப்புரவுப் பணி ஆய்வுக் கூட்டம் நடத்தி முடுக்கி விட ஆலோசணை

திருப்பூர், ஜூன் 6-திருப்பூர் மாநகராட்சியில் முடங்கிக் கிடக்கும் துப்புரவுப் பணிகளை முடுக்கிவிடுவதற்கு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் துப்புரவுபணி சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள், அனைத்து சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுபணி மேற்பார்வையாளர்கள், அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர சுகாதார பணியாளர்கள் கலந்து   கொண்டனர்.இதில் தினசரி காலை 6 மணிஅளவில் அனைத்து வார்டு பகுதிகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ள ஏதுவாக களப்பணியில் அனைத்து பணியாளர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிமேற்கொள்ள வேண்டும். சுகாதார ஆய்வாளர் இதைக் கண்காணிக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் தினமும் மதிய வேலைகளில் வார்டு வாரியாக கூட்டுத் துப்புரவுப் பணி மேற்கொண்டு, தேங்கியுள்ள குப்பைகளை அகற்றியும், சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை நீக்கியும் தேவையற்ற பொருட்களை அகற்றியும் சுத்தமாகப் பராமரிக்குமாறும் ஆணையர் கூறினார். அத்துடன் பிளாஸ்டிக்  ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையர் வலியுறுத்தினார். மாநகராட்சி பகுதியில் அமைதுள்ள அனைத்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், அடுக்கு மாடிகுடியிருப்புகள் ஆகிய இடங்களில் குப்பைகளைத் தரம் பிரித்த நிலையில் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் குடிநீர் குழாண்கள் மூலம் வரும் தண்ணீரில் போதுமான அளவு குளோரின் இருப்பதை உறுதி செய்து அதற்கான பதிவேட்டை அனைத்து சுகாதார ஆய்வாளர்களும் பராமரிக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் இருபுறம் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி தூய்மையாக பராமரிக்க சுகாதார அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணையர் கூறினார்.சமீப நாட்களாக திருப்பூரில் மர்மக்  காய்ச்சல், டெங்கு தாக்குதல் அறிகுறி இருப்பதாக மருத்துவ வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூய்மைப்பணியை முடுக்கிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் கோரிக்கை வலுத்துள்ளது. இந்த பின்னணியில் ஆணையர் துப்புரவு பணி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தைநடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டு வருவதால், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியை மட்டுப்படுத்துவதற்கு இப்போதிருந்தே உள்ளாட்சி அமைப்புகளை மாநில அரசு அன்றாட குடிநீர், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கும் நிலையில் இக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அரசு வட்டாரத்தினர் தெரிவித்தனர். தேர்தலுக்காக என்றில்லாமல் மக்களின் அடிப்படை சுகாதாரம் என்ற முறையில் இப்பணியை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

;