tamilnadu

img

இயல்புநிலை திரும்பியது - சமூக இடைவெளி காற்றில் பறந்தது

 அவிநாசி. மே. 6 - ஊரடங்கின் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் அவிநாசியின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத்தோடு, முகக் கவசம் அணியாமலும் நடமாடத் தொடங்கியதால் கொரோனா நோய் தொற்று அச்சம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 40 நாட்களுக்கு மேலாக மால்கள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உட்பட்ட பல தொழில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடந்தன. இதைத்தொடர்ந்து மே 4 தேதியில் இருந்து சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

இதையடுத்து வணிக நிறுவனங்களும் மற்றும் அனைத்து கடை உரிமையாளர்களும் குழப்பத்துடன் கடைகளை திறக்கத் தொடங்கினர்.  அதேநேரம், பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் கடைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் கொரோனா தொற்று மீண்டும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். முன்னதாக அவிநாசி மங்கலம் சாலை கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைச் சுற்றி 5 கிலோமீட்டருக்கு சாலைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதனன்று மங்கலம் சாலை மட்டும் அடைக்கப்பட்டு மீதமுள்ள பகுதிகள் திறக்கப்பட்டன.

;