tamilnadu

விபத்தில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

 திருப்பூர், அக். 28 - திருப்பூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் ஐந்துபேருக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் தானம் செய்யப்பட்டன. திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டி பேரூராட்சி அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி ராஜாமணி (58). கடந்த 14ஆம் தேதி இவர் வீட்டில் இருந்து கடைக்குச் செல்வதற் காக அம்மாபாளையம் அவிநாசி சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக இருசக்கர வாகனத் தில் வந்தவர் இவர் மீது மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவை யில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவ மனையில் தலைக் காயத்திற்கு சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது.  இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தார் முன்வந்தனர். அதன் படி அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் அகற்றி எடுக்கப்பட்டன. அந்த உறுப்பு கள் ஐந்து பேருக்கு மறுவாழ்வு வழங்கும் வகையில் பொருத்தப்பட்டதாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் நல்லா ஜி.பழ னிச்சாமி தெரிவித்தார். இவரது கணவர் சென்னியப்பன் கிருஷ்ணா பிரஸ் என்ற அச்சகத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டு காலமாக திருப்பூர் மாவட் டத்தில் அர்ப்பணிப்புடன் மார்க்சிஸட் கட்சியின் அச்சுப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் கடுமையான உழைப்பாளி என்பது குறிப்பி டத்தக்கது.