tamilnadu

பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர் சேர்க்கும் தனியார் பள்ளிகள் - கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 11– பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வந்தவு டனேயே, பிளஸ் 1 வகுப்புக்கு மாண வர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு செவ்வாயன்று அறிவித்தது. இந்த அறி விப்பு வந்தவுடன் தனியார் பள்ளி நிர் வாகங்கள் மாணவர்களின் மதிப்பெண் கணக்கீட்டை முடித்து புதனன்று பிளஸ் 1 சேர்க்கையைத் தொடங்கி விட் டன. தங்கள் குழந்தைகளின் பிளஸ் 1 பாடப்பிரிவைத் தேர்வு செய்வதற்கு உடனடியாக பள்ளிக்கு வரும்படி பெற் றோர்களுக்கு தனியார் பள்ளிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை குறித்து கல்வித் துறை சார்பில் இதுவரை எந்த அறி விப்பும் வெளியிடவில்லை. இதனால் அரசுப் பள்ளிகள் அதற்குரிய நடவடிக் கையை தற்போது மேற்கொள்ள இய லாது. ஆனால், இந்நிலையைத் தங்க ளுக்குச் சாதகமான வாய்ப்பாக பயன்ப டுத்திக் கொள்ள முனையும் தனியார் பள்ளிகள் அதிகாரப்பூர்வமற்ற முறை யில் பிளஸ் 1 சேர்க்கையைத் தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக கல்வி மேம் பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சு.மூர்த்தி கூறுகையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைத் தொடங்கப்படாத நிலையில், தனியார் பள்ளிகளில் மட்டும் மாணவர்களை சேர்க்கத் தொடங்குவது மிகவும் தவ றானதாகும். இதனால் அரசுப் பள்ளி களில் படிக்க விரும்பும் மாணவர்க ளையும் தனியார் பள்ளிகளில் சேர வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கும் ஒரு மறைமுக தூண்டுதல் ஏற்படும். இது அரசுப் பள்ளிகளை மேலும் பாதிக்கும். எனவே, நோய்த் தொற்றுத் தடுப்புக் காலத்தில் அரசு அனுமதி பெறாமல் பள்ளிகளைத் திறந்து   பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்திவரும் தனியார் பள்ளிகள் மீது பேரிடர் நோய்த் தடுப்புச் சட்டத்தின் படி தமிழ்நாடு அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

;