tamilnadu

img

மாநில அளவிலான களரி போட்டி

உடுமலை, ஜன. 25- உடுமலையில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் சார்பில் 3வது மாநிலம் தழு விய களரி போட்டி நடந்தது. உடுமலை ஆர்.கே.ஆர்மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான களரி போட்டியில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் செயலாளர் வீரமணி வர வேற்று பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ரவிக் குமார், இந்தியன் களரி பயட்டு பொதுசெய லாளர் பூந்துரை சோமன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். காலையில் நடை பெற்ற களரி போட்டிகளை வட்டாட்சி யர் தயானந்தன் துவக்கி வைத்தார். ஆர்கே ஆர் கல்வி குழுமங்களின் செயலாளர் கார்த்திக்குமார் தலைமை வகித்தார். சிவக் குமார் நூலகர் வீ.கணேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.  களரி போட்டியில் தமிழ்நாடு, கேரள  ளரி ஆசான்கள் கன்னியாகுமரி பால், நாகர் கோவில் வேலைப்பன், திருநெல்வேலி கீரின்ஸ் ஆர்ட்ஸ் கல்சுரல் ரிசர்ச் அன்டு சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர், தலைவர் டாக்டர்.ஆர்.ஆல்வின் ஜெகதீஸ், நாகர் கோவில் தேக்கன் களரி வர்ம அடிமுறை அறக்கட்டளை வே.சங்கர், பாலக்காடு வல்லபட்டா களரி சங்கம் சரவணன், பாலகிருஷ்ணன் குருக்கள்,‌ கேரளா பேரரசு களரி, சன்னக்காடு ஓத்தப்பாலம் அன்வர், வீரத் தமிழர் அறக்கட்டளை கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிகளை பகத் சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை டிரஸ்டி ராதா, வீரமணி, பஞ்சலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்கினர் இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக் கல், சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் 200 பேர்  பங் கேற்றனர். 3 வகையாக நடந்த போட்டிக ளில், இறுதியாக தேசிய அளவில் நடை பெறும் களரி போட்டிகளில் வெற்றி பெறு பவர்களுக்கு மத்திய அரசு விளையாட்டுத் துறை வழங்கும் கல்வி உதவித் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். நிறைவாக தமிழ்நாடு ஒருங்கிணைப்பா ளர் ஏகலைவன், களரி சங்கம் சுமேஸ் குருக்கள் நன்றி கூறினார்.

;