tamilnadu

குழந்தைகளுக்கு பாடல் பயிற்சி

உடுமலை, மே 22-உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டி கிளை நூலகத்தில் கோடைகால விடுமுறையையொட்டி குழந்தைகளுக்கு பாடல் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், நூலக வாசகர் வட்டத் தலைவர் கு. திருவேங்கடம் தலைமை வகித்தார். இதில் நமது முன்னோர்களின் பாரம்பரிய கும்மி பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு பாடல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. உடுமலையை அடுத்துள்ள கிழுவன்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கிராமிய இசை பாடகர் சிவராஜ், பொய்கால் குதிரை ஆட்ட கலைஞர் பழனிசாமி ஆகியோர் இணைந்து இப்பயிற்சியை அளித்தனர். மேலும், பாடல்கள் மூலம் நன்னெறி கருத்துகளும் எடுத்துரைக்கப்பட்டன. இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முடிவில் நூலகர் இரா. லட்சுமணசாமி நன்றி கூறினார்.