tamilnadu

img

செப்.1: திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர், ஆக. 22- அனைத்து முறைசாராத் தொழிலாளர்களுக்கும் உரிய  நிவாரணம் வழங்கக்கோரி செப்டம்பர் 1 ஆம் தேதி  நலவாரிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக திருப்பூ ரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி, எம்எல்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங் கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனியன்று அவிநாசி சாலையில் உள்ள சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண் டும். புதுப்பிப்புப் பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகள் கலைய வேண்டும். திருப்பூரில் உள்ள நலவாரிய அலுவ லகத்திற்கு நிரந்தர அதிகாரியை நியமிக்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப். 1 ஆம் தேதி திருப்பூர் பி.என் ரோட்டில் உள்ள நலவாரிய அலுவல கம் முன்பு மாவட்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய் யப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில்  சிஐடியு கட்டுமான சங்க மாநி லப் பொதுச் செயலாளர் டி.குமார், பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத்,  ஏஐடியுசி நிர்வாகிகள் ஜெகநாதன், மூர்த்தி, எல்.பி.எப் செயலாளர் ஆர்.ரங்கசாமி, அ.சரவணன், ஐஎன்டியுசி செயலாளர் சிவசாமி, சீனிவாசன், எச்எம்எஸ் செய லாளர் முத்துசாமி, முருகன்,  எம்எல்எப் செயலாளர் பாண்டிய ராஜ், மனோகர் மற்றும் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

;