திருப்பூர், செப். 22- மத்திய அரசின் விவசாய விரோத சட்ட நிறைவேற்றத்தை எதிர்த்து செப்.25 ஆம் தேதியன்று நாடு தழுவிய மறியல் போராட் டத்தை திருப்பூர் மாவட்டத்தில் மகத்தான வெற்றி பெறச் செய்யும்படி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார், சிபிஐ தவிச நிர்வாகி எஸ்.சின்னசாமி, உஉக மாவட்டச் செயலாளர் பி.சோமசுந்தரம் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது,
விவசாயத்தையும், விவசா யிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் வகையில் மத்திய மோடி அரசு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியுள்ள 1955 அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம், வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்கு விப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) சட்டம், விவசாயிகளின் விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும், மின்சார திருத்த சட்ட வரைவை மத்திய அரசு திரும்ப பெற வலியு றுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு (ஏஐகே எஸ்சிசி) அறைகூவலுக்கு ஏற்ப திருப்பூர் மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதியன்று நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊத்துக்குளி, அவிநாசி, தாராபுரம், உடு மலைபேட்டை ஆகிய மையங்களில் நடை பெறும் சாலை மறியல் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கவும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடைபெறும் இப்போராட்டத்தை ஆதரித்து அனைத்து விவசாய இயக்கங்கள், விவ சாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற் சங்கத்தினர், எதிர்க்கட்சிகள் ஆகியோர் பங் கேற்க வேண்டும் என அறைகூவல் விடுத் துள்ளனர்.