திருப்பூர், ஆக. 29 – தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாற்றவும், அதன் 3 ஆயிரம் ஆண்டு ஞானத்தைக் காப்பாற்றவும் சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறி னார். திருப்பூர் குமாரசாமி திருமண மண்டபத்தில் புதன்கிழமை கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப் படை நூல் அறிமுக விழா வெற்றித் தமிழர் பேரவை சார்பில் நடை பெற்றது. ராம்ராஜ் காட்டன் கே.ஆர்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., தமிழாற்றுப்படை நூலை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து ஏற்புரை ஆற்றிய கவிஞர் வைரமுத்து பேசு கையில் கூறியதாவது: நிலம், பணம் போன்ற சொத்துகள் நான்கைந்து தலை முறைக்கு மேல் நிற்கப் போவ தில்லை. அந்த சொத்தைப் பாது காக்கவே படாதபாடு படும்போது தமிழர்களின் 3 ஆயிரம் ஆண்டு ஞானத்தை எப்படி விட்டுவிட முடியும், அது நம் சொத்தல்லவா? அரசன் மிருகத்தின் குணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என சொன்ன இத்தாலியின் மாக்கிய வல்லியை விட, முறை செய்து காப் பாற்றும் மன்னவன் இறைவன் எனப் போற்றப்படுவான் என்று சொன்ன தமிழ்ப் புலவன் வள்ளுவர் உயர்ந்தவர் அல்லவா? மக்களை மிருகம் ஆள்வதா, இறைவன் ஆள்வதா? உலகிலேயே வேகமானது ஒளி. அந்த ஒளியை விட வேகமானது சொல். சொல்லின் வழியாக அறிவு கடத்தப்படுகிறது. அந்த சொல்லின் வழியாக ஞானம், அடுத்தடுத்த தலைமுறைக்கு நூற்றாண்டு காலம் கடத்தப்படுகிறது. சொல்லில் பண் பாடு, வரலாறு, நாகரிகம் இருக் கிறது. சொல்லை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும். தமிழில் கற்பு என்பதும், வடமொழியில் பதி விரதம் என்பதும் ஒன்றுதான். ஆனால் கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. பதி விரதம் என்பது பெண் கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என ஒரு சார்பாகச் சொல்வது. ஒரு சொல்லில் ஒரு பண்பாடு இருக் கிறது. அதேபோல் கன்னிகாதானம் என்ற சொல்லில் பெண்ணை பீரோ, கட்டில் போன்ற பொருளாகப் பார்க்கும் பார்வை உள்ளது. பெண் என்ன பொருளா? ஆனால் தமிழில் வாழ்க்கைத் துணை நலம் எனச் சொல்கிறோம். ஒருவருக்குத் துணை செய்வோர் எப்போதும் வலிமையானவராக இருப்பார்கள். வாழ்க்கையில் ஆணுக்குத் துணை யாக வரும் பெண், ஆணை விட வலிமையானவர் என்பதை இந்த சொல் குறிக்கிறது. எனவேதான் சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்கிறேன். நான் உயிரோடு இருக்கும் வரையும், எனக்குப் பிறகும் தமிழர்கள் சொல்லை அழிக்க அனுமதிக்க மாட்டோம். நாடாளுமன்றத்தில் எதற்கெ டுத்தாலும் மகாபாரதம், ராமா யணம், காளிதாஸ் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியப் பண்பாடுதான் பண்பாடு என்று சொல்வது பிழை, தமிழ்ப் பண்பாட்டை மறந்தால் இந்தியா இல்லை. தமிழ் பண்பாடு நாடாளு மன்றத்தில் பேசப்பட வேண்டும். எழுதுகிறவன்தான் அறிவாளி ஆகிறான். படிப்பவன் அல்ல. எழுத்து தமிழன் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. தயவு செய்து எழுதுங்கள். மொழியில் ஒன்று ஒலிவடிவமான பேச்சு, மற் றொன்று எழுத்து! எனவே மொழி யைக் காக்க எழுதுங்கள், பேசிக் கொண்டே இருங்கள். குழந்தை களுக்குத் தமிழில் பெயர் வையுங்கள். யாருக்காவது தமிழில் பெயர் தேவை என்றால் என் வீட்டுத் தொலைபேசி எப்போதும் காத்தி ருக்கும். இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறினார். முன்னதாக தமிழாற்றுப் படை நூலை அறிமுகம் செய்து வைத்த கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., பேசுகையில்: கவிஞர் வைர முத்து எழுதியுள்ள தமிழாற் றுப்படை நூல் ஒரு ஆராய்ச்சி நூல். இந்த நூலை அனைத்து வரலாற்று காரணங்களையும் உணர்ந்து எழுதியுள்ளார் கவிஞர். தமிழாற்றுப்படை அனைவரிடத் திலும் இருக்க வேண்டிய புத்த கம். தமிழர்கள் அனைவரும் அவ ரவர் வங்கி பாதுகாப்பு பெட்ட கங்களில் வைத்து பாதுகாக்க வேண்டிய புத்தகமாக இது இருக் கும். புத்தகத்தைக் காலம் உரு வாக்குகிறதா அல்லது காலத்தைப் புத்தகம் உருவாக்குகிறதா என்பது சிக்கலான கேள்வி. இந்த காலத் திற்கான புத்தகமாக தமிழாற்றுப் படை இருக்கிறது, இப்புத்தகத்தை இளைஞர்களிடம் சரியாக கொண்டு சேர்க்கும்போது மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்துத்துவ, பாசிச சக்திகள் நாட்டை ஆளும் சூழலில் ஒரே நாடு, ஒரே மொழி என உரத்துக் கூறும் கால கட்டத்தில் தமிழர்கள் தங்கள் இனம், மொழி, பண்பாட்டின் தனித் தன்மையை விட்டுத் தர மாட் டார்கள். தனித்தன்மையுடன் ஒற்றுமைக்காக இருப்போமே தவிர, ஒற்றைத்தன்மைக்காக தனித் தன்மையை விட்டுத் தர மாட்டோம். இந்த புத்தகத்தை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். இவ்வாறு தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார். இவ்விழாவில் முன்னாள் எம்.எல்ஏ., கே.தங்கவேல், முன்னாள் மேயர் க.செல்வராஜ் உள்பட திருப் பூரின் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், தொழில் துறையினர், இளை ஞர்கள், பொது மக்கள் பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர். நிறை வாக வெற்றித் தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் அரிமா எம்.ஜீவானந்தம் நன்றி கூறினார்.