tamilnadu

அவிநாசி : மரக்கன்றுகள் நடும் விழா

அவிநாசி, அக்.14- திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தர வின்படி, மாவட்டத்தில் அனைத்து காவல் நிலை யங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றனர். அதன்படி, அவிநாசி அருகே சேவூர் காவல் நிலையத்தில் செவ்வாயன்று வேம்பு, பூவரசன், மகிழம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் அன்பரசு, செல்வராஜ், சிவக்குமார், தனிப்பிரிவு காவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் சக்கரவர்த்தி, சச்சு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.