tamilnadu

img

வாக்காளர் பட்டியலில் குளறுபடியை களைய கோரிக்கை

திருப்பூர், நவ. 5- திருப்பூர் போயம்பாளையம் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களையுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போயம்பா ளையம் பிரிவு பகுதி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் சசிக்கு மார் மாநகராட்சி ஆணையருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாநகராட்சி இரண் டாவது மண்டலத்துக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதி பழைய 20ஆவது வார்டுக்கு உட்பட்டதா கும். தற்போது புதிய வார்டு மறுவ ரைைய செய்யப்பட்டபோது, போயம்பாளையம் பேருந்து நிறுத் தத்திற்கு கிழக்கில் கணபதிநகர், சக்திநகர், வடிவேல் நகர், போயம்பா ளையம், சதாசிவ நகர் உள்ளிட்ட பகு திகள் ஏழாவது வார்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  தற்போது வெளியிட்டுள்ள வாக் காளர் பட்டியலின்படி வாக்குச்சா வடி எண் 59 ஏழாவது வார்டுக்குட் பட்ட சக்திநகர், கணபதிநகர் பகுதி வாக்காளர்களை உள்ளடக்கிய பகு தியாகும். மேற்கண்ட சக்திநகர், கண பதிநகர் பகுதியைச் சார்ந்த சுமார் 243 வாக்காளர்களின் பெயர்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக் காளர் பட்டியல்படி தவறுதலாக வார்டு எண் 8-இல் வாக்குச்சாவடி எண் 66-இல் தொட்டிபாளையம் என்ற பெயரில் இணைக்கப்பட் டுள்ளன. ஏழாவது வார்டில் குடியிருக்கும் வாக்காளர்களின் பெயர் எட்டாவது வார்டு வாக்குச்சாவடியில் இணைக் கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தி யில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. புதிதாக வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் கணவர் பெயர் ஏழாவது வார்டு வாக்குச் சாவடியிலும், மனைவி பெயர் எட் டாவது வார்டு வாக்குச் சாவடியி லும் இடம் பெற்றுள்ளது. தாயார் பெயர் ஏழாவது வார்டு வாக்குச் சாவடியிலும், மகளின் பெயர் எட்டா வது வார்டு வாக்குச்சாவடியிலும் இடம் பெற்றுள்ளன. இந்த குளறு படிகளை உடனடியாக சரி செய்து அந்தந்த வார்டு வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக் குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று  அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல, அவிநாசி பேரூ ராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக் கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 11ஆவது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் 419 வாக் காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் ஒரு குடும்பத்தில் 4 பேர் வசித்து வரும் நிலையில் இருவர் அதே வார் டிலும், மேலும் இருவர் 7 வது வார்டுக் கான வாக்காளர் பட்டியலில் வி.எஸ்.வி. காலனிக்கு   மாற்றப்பட் டுள்ளனர். இதுபோல் பலரும் 7வது வார்டு வாக்காளர்களாக மாற்றப் பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் குளறுபடிகளைப் போக்க முன்பு இருந்ததைப் போல 11ஆவது வார் டுக்கு மாற்ற வேண்டுமென அவி நாசி பகுதியில் ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதியினர் மனு கொடுத் துள்ளனர்.

;