tamilnadu

img

பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் அகற்றி முன்மாதிரியாகத் திகழும் காவிலிபாளையம் புதூர்

திருப்பூர், ஆக. 4 - திருப்பூர் காவிலிபாளையம் புதூர் பகுதி மக்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் பிளாஸ் டிக் கழிவுகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டு ஊரை முழுமையா கத் தூய்மைப்படுத்தி உள்ளனர். திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலம் பழைய 14ஆவது வார்டுக்கு உட்பட்டது காவிலி பாளையம் புதூர். மாநகரின் மேற்குப்பகுதி எல்லையில் இந்த ஊர் அமைந்துள்ளது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கிராமப்புறமாக தூய்மையாக இருந்த இப்பகுதி நகரமயம் ஆன  நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு வீசப்பட்டு, பிற நகரப்பகுதிகளைப் போல் சுகா தாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்த ஊர் மக் கள் ஒன்றுகூடி, பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்களே  அகற்றுவது என்ற தீர்மானித்த னர்.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாக ஞாயிற்றுக்கிழமை களில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறார்கள் என பல தரப்பினரும் குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு  வீசப்பட்டுள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்பட மக்கும் தன்மை இல்லாத அனைத்து பிளாஸ்டிக் கழிவு களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  காவிலிபாளையம் புதூர் தொடக்கப் பள்ளி வளாகம், பள் ளியின் சுற்றுப்புறம், கழிவறை பகுதி, வீதிகள் என ஊரின் மூலை  முடுக்குகளில் இந்த தூய் மைப்பணி மேற்கொள்ளப்பட் டது. ஒவ்வொரு வாரமும் பல மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த கழிவு களை மாநகராட்சி அதிகாரிக ளுக்குத் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இறுதியாக ஞாயிறன்று(நேற்று) 12 மூட்டை பிளாஸ்டிக் குப்பை கள் சேகரமானது. கடந்த நான்கு வாரங்களில் மொத்தம் 50 மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இப்போது காவிலிபாளையம் புதூர் ஊர்  முழுமையும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட தூய்மையான பகுதியாக மாறி இருப்பதாக பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஊர் மக்களின் இந்த முன் முயற்சியைப் பார்த்து மாநக ராட்சி அதிகாரிகள், அவர்களிடம் குப்பை சேகரிப்புக்கு சிறப்பு  கவனம் செலுத்தி ஒத்துழைப்பு  வழங்குவதாக கூறியிருக்கின்ற னர். மக்கும் குப்பை, மக்காத  குப்பை என இரு குப்பைகளை வீடுகள் தோறும் சேகரிப்பதற்கு இரு கூடைகள் கொடுக்கப்பட்டு, அவற்றில் தரம் பிரித்து குப்பை களை கொட்டி வைக்கவும், மாநகராட்சிப் பணியாளர் மூலம் தினமும் அவற்றை சேகரித்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதன்படி தற்போது தின மும் குப்பை வாகனம் வரத் தொடங்கியுள்ளது. குப்பை உரு வாகும் இடத்திலேயே பிளாஸ் டிக் சேகரிப்பதால் இனிமேல் காவிலிபாளையம் புதூரில் பிளாஸ்டிக் குப்பை பொது இடத்தில் இருக்காது. வெளி யார்கள் யாரேனும் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிச் சென்றாலும் உடனடியாக அவற்றை அப் புறப்படுத்த முடியும் என்றும் இந்த ஊர் மக்கள் தெரிவித்த னர். பெயரளவுக்கு இல்லாமல் உண்மையிலேயே பிளாஸ்டிக் இல்லாத தூய்மை பகுதியாக ஊர் மக்களின் முயற்சியால் மாறி யிருக்கிறது காவிலிபாளையம் புதூர்.

;