திருப்பூர், செப். 10- திருப்பூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம், விபத்தில் படுகாயம் அடைந் தவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு கட்டாய பண வசூல் செய்ததாகக் கூறி, இறந்துபோன இளைஞரின் சடலத்து டன் உறவினர்கள், பல்வேறு அமைப்பி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் கருமத்தம் பட்டியை அடுத்த செம்மாண்டம்பாளை யம் அனந்தபுரத்தை சேர்ந்த துரைசாமி யின் மூத்த மகன் நவீன்குமார் (22). விசைத்தறி தொழிலாளி. கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி சோமனூர் அருகே விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருப்பூர் குமார் நகரில் உள்ள ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். கடந்த ஒரு மாதமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி கோவை அரசு மருத்துவம னைக்குச் சென்று சிகிச்சை அளிக்க விரும்புவதாக நவீன்குமாரின் பெற் றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். ஆனால் சிகிச்சை பெற செலவா கும் தொகையை கடன் மூலமாக நாங்கள் ஏற்பாடு செய்வதால் இங் கேயே சிகிச்சை அளிக்கலாம் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட தாகத் தெரிகிறது. பின்னர் மருத்துவ மனை நிர்வாகம் திடீரென கடன் கிடைக்காததால், நீங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து கொள்ளும்படி கூறியுள்ளனர். மேலும் இதுவரை செலுத்தியுள்ள ஐந்தரை லட்சம் ரூபாய் போக மீதி தொகையை செலுத்திய பின்புதான் நவீன்குமாரை அழைத்து செல்ல வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறினார்களாம். இதைய டுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நவீன் குமார் கோவை அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நவீன் குமாரின் பெற்றோர், உறவினர் மற் றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஞாயிறு மதியம் ரேவதி மருத்துவமனையை முற்றுகையிட்டு நுழைவாயிலில் தரை யில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இது குறித்து தகவலறிந்த 15 வேலம் பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன் தலைமையில் ஏராளமான காவலர்கள் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக புகார் வழங்கு மாறு கேட்டுக் கொண்டனர். இதைய டுத்து நவீன்குமாரின் தந்தை 15 வேலம்பாளையம் காவல் நிலையத் தில் புகார் மனு கொடுத்தார். ரேவதி மருத்துவமனையில் 1 மாதம் தனது மகன் சிகிச்சை பெற்றும், கோவை அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு அவர்களுக்கு சொந்த மான ஆம்புலன்சை அனுப்ப நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலும் செலுத்த வேண்டிய மீதி தொகைக்காக தனது மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டனர். எனவே உரிய சிகிச்சை அளிக்காமல், கட்டாய பண வசூல் செய் யும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் திங்களன்று கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனை முடித்து ஒப்படைக்கப்பட்ட நவீன்குமாரின் சடலத்துடன் உறவினர் கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் நேரடியாக ரேவதி மருத்துவமனைக்கு வந்தனர். நவீன்குமாரின் சடலத்தை மருத்துவ மனை முன்பாக சாலையில் வைத்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கட்டாய பண வசூல் செய்வதாக மருத்து வமனை நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு காவல் உதவி ஆணை யர் வெற்றிவேந்தன், ஆய்வாளர் ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோர் நவீன்குமாரின் சடலத்தை எடுத்துக் கொண்டு கலைந்து சென்ற னர். இதற்கிடையே நவீன்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விபரத்தை அவர்களது பெற்றோரிடம் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்ததாகவும், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தங்கள் ஆம்புலன்ஸ் வாகனம் வேலூர் சென்றிருந்ததால் வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும் படி கூறியதாகவும் மருத்துவமனை நிர்வாகி மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டோர் மருத்துவமனையில் மருத் துவர், பணியாளர்களை தரக்குறைவா கப் பேசி மனஉளைச்சல் ஏற்படுத்தியதா கவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.