tamilnadu

img

குப்பைக் கிடங்கை மாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் மனு

அவிநாசி, பிப். 27- அவிநாசி அருகே கைகாட்டி புதூரில் அமைந்திருக்கும் குப்பைக் கிடங்கை இட மாற்றம் செய்யக்கோரி பேரூராட்சி ஆணை யரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித் தனர். திருப்பூர் மாவட்டம்,அவிநாசி பேரூ ராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் பேரூராட்சி  முழுவதும் சேக ரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்ப தற்காக, கைகாட்டி புதூரில் பல வருடங்க ளுக்கு முன்பு குப்பைக்கிடங்கு அமைக் கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வருகின்ற பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்ற னர். ஆகவே, குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி ஆணையரிடம் மனு அளித்த னர். இதனை பெற்றுக்கொண்ட பேரூராட்சி ஆணையர், தங்கள் கோரிக்கையை அரசி டம் தெரியப்படுத்தி,விரைவில் மாற்று இடம் தேர்வு செய்து தருவதாக உறுதிய ளித்தார்.