tamilnadu

img

மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் இருப்பு உடுமலை வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

உடுமலை, செப். 18- உடுமலை வட்டாரத்தில் மக்கா சோள பயிரில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறிகள் வேளாண்மை உதவி இயக்குநரகத்தில் இருப்பு வைக் கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாரத்தில் மக்காச்சோளம் பயிர் செய்வதற்கு விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வைத்துள்ளனர். மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்த முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேளாண் விரிவாக்க மையம் அறி வுறுத்தியுள்ளது. அனைத்து விவ சாயிகளும் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன் ஏக்கருக்கு 100 கிலோ அள வில் வேப்பம்புன்னாக்கு இடுவ தால் கூண்டுப்புழுவைக் அழிக்க லாம். பேசியானாவைப் பயன் படுத்தி விதை நேர்த்தி செய்து மக்கா சோளம் விதைக்க வேண்டும். வயல் வரப்புகளில் தட்டை, சூரிய காந்தி மற்றும் சாமந்தி ஆகியவற்றை விதைக்கலாம்.  மக்காச்சோளம் விதைத்து 15-20 நாட்களில் படைப்புழு தாக்குதல் தென்பட்டால் பூஞ்சான மெட்டா ரைசியம் அனிசோபிலே என்கிற பூஞ்சானத்தை எக்டருக்கு 2 கிலோ வீதம் குறுத்தில் நன்குபடும்படி தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 10 எண்கள் வைப்பதன் மூலம் அந்துப் பூச்சிகளைக் கலந்து முட்டை இடு வதைத் தவிர்க்கலாம்.  உடுமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெவே ரியா பேசியானா என்ற உயிர் பூஞ்சானம் மற்றும் மெட்டாரை சியம் அனிசோபிலே, இனக்கவர்ச்சி பொறிகள் இலவசமாக 10 எண்கள் வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ள தாகவும், விவசாயிகள் இவற்றை வாங்கி பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

;