tamilnadu

img

மார்ச் 31 வரை உற்பத்தியை முழுமையாக நிறுத்த விசைத்தறியாளர்கள் முடிவு

திருப்பூர், மார்ச் 25 - கோவை, திருப்பூர் மாவட்டங் களில் விசைத்தறி உற்பத்தியை முழுமையாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விசைத்தறி யாளர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் சோமனுர் தலைவர் பழனி சாமி தலைமையில், பல்லடம் வேலுச்சாமி முன்னிலையில் பல்ல டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: உலக  அளவில் கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் மூலம் பல் வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். மத்திய, மாநில அரசு கள் இது சம்பந்தமாக எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கை களுக்கு வலு சேர்க்கும் வகையில் நம் விசைத்தறியாளர்கள் யாரும் பாதிக்காத வண்ணம் நாம் அனை வரும் ஒன்றாக போராடவேண்டி யுள்ளது. எனவே இது குறித்து தீவிர பரிசீலனைக்குப் பிறகு பல் வேறு ஆலோசனைகள் விவாதிக் கப்பட்டு மத்திய, மாநில அரசுக ளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கு வது என்று முடிவெடுக்கப்பட்டுள் ளது. அதன்படி, தமிழக முதல்வர் அறி விப்பின்படி வரும் மார்ச் 31 வரை கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விசைத்தறி நிறுவனங்களில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத் தறிகளை இயக்காமல் முழு உற் பத்தியையும் நிறுத்தி ஒத்துழைப்பு வழங்கி, நம்மையும், நம் தொழி லாளர்களையும் இந்தக் கொடிய நோயில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள் ளது. சோமனுர், பல்லடம், கண் ணாம்பாளையம், அவிநாசி, தெக் கலுர், மங்கலம், 63 வேலம்பாளை யம், புதுபாளையம், பெருமநல் லூர் உள்ளிட்ட பகுதி விசைத்த றியாளர்கள் இந்த உற்பத்தி நிறுத் தத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த அறிவிப்பை முழுமை யாக நடைமுறைப்படுத்த கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் சங் கங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சங்கம் எடுக்கிற முடிவு களுக்குக் கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டும் எனவும், அதைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்கா தவர்கள் எந்த ஒரு பாதிப்புக்கு உள்ளானாலும் அவரே பொறுப்பு, சங்கத்தை அணுக வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்கள் உட னடியாக பிடித்து வைத்துள்ள விசைத்தறியாளர்களின் கூலி பணத்தை போர்க்கால அடிப்படை யில் வழங்கிட இக்கூட்டம் கேட்டு கொண்டுள்ளது.

;