tamilnadu

போக்சோ சட்டத்தில் கைதானவருக்கு 21 ஆண்டுகள் சிறை 


திருப்பூர், ஜன. 5- திருப்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள் ளது. திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரவி(எ) விருமாண்டி(27). பின்னலாடைத் தொழிலாளியான இவர் திருமணமானவர். திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பின்னலாடை நிறு வனம் ஒன்றில் ரவி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அங்கு வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை, கடந்த 2014 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி பெங்களூருக்கு கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் ரவி (எ) விருமாண்டியை மே.19 ஆம் தேதியன்று கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் மக ளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன் தீர்ப்பு சனியன்று வழங்கப்பட்டது. அதில் பெற்றோருக்கு தெரியாமல் சிறு மியை கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டு சிறைத்தண் டனையும், ரூ.1000-ம் அபராதமும், போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1000-ம் அபராதமும் விதிக்கப்பட்டது.  மேலும் பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்ட பெண் என்ப தால் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.5000ம் அபராதம் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இதையடுத்து ரவி (எ) விரு மாண்டிகோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

;