tamilnadu

img

உடுமலை அருகே காட்டுப்பன்றி தாக்கி ஒருவர் உயிரிழப்பு

உடுமலை, ஜன. 30- உடுமலை அருகே காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவர் உயிரி ழந்தார். இதனைத் தொடர்ந்து வன விலங்குகளின் பட்டியலிலிருந்து பன் றியை நீக்கும் கோரிக்கை வலுவடைந் துள்ளது.  திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், (தளி) ஜல்லிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் சண்முகவேல். இவரை செவ்வாயன்று காலை 7  மணிக்கு காட்டுப் பன்றி தாக்கியதில் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. முதலில் உடுமலை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக் கப்பட்டார். ஆனால் சிகிச்சை பல னின்றி சண்முகவேல் உயிரிழந்தார்.  இதுகுறித்து உடுமலை வனத் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் கணேஷ்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். மேலும் வன விலங்கு தாக்குதலால் உயிரிழந்த சண்முகவேல் குடும்பத் திற்கு உடனடியாக இழப்பீட்டு தொகையில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை (வியாழனன்று) வழங் கப்படும் என்றும், மீதி ரூ.3 லட் சத்து 50 ஆயிரம் விரைந்து வழங் கப்படும் என்றும் கூறினார்.  இந்நிலையில், மனிதர்களின் உயிருக்கும், விவசாயிகளின் பயிர் களுக்கும் ஏற்படும் இழப்புகளை யும், பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு அரசு விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப் புகளுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். காட்டு பன்றிகளை வன விலங்குகள் பட்டி யலிலிருந்து நீக்க வேண்டும். மற்ற வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். இந்நிலை நீடித்தால் போராட்ட களம் காண்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரி வித்துள்ளனர்.

;