tamilnadu

img

மர்மமான முறையில் வீட்டுக்குள் தீ - ஒருவர் பலி

உடுமலை, நவ.17- மர்மமான முறையில் வீட்டுக் குள் ஏற்பட்ட தீ விபத்தால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து உடுமலை காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடும லைப்பேட்டை ராமசாமி நகர் பகுதி யில் வசித்து வருபவர் ராஜன் (57).  இவருக்கு மனைவி ஜெயந்தி மற்றும் மகன்கள் பிரதீப் (27) பிரவீன் (24) ஆகியோர் உள்ளனர். ராஜன் தபால் துறையில் பணி யாற்றி வருகிறார். இவரது மனைவி  ஜெயந்தி அரசு பள்ளியில் தலைமை  ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் செவ்வாயன்று காலை ராஜனின் உறவினர் ஒருவர்  நீண்ட நேரமாக இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் இவர்கள் வீட்டில் உள்ள யாரும் தொலைபேசியை எடுத்து பேச வில்லை. இதில் சந்தேகம் அடைந்த  உறவினர் இவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அவர்கள்  வீட்டில் இருந்து புகை வந்துள்ளது.  

இதனை அக்கம் பக்கத்து வீட்டா ரும் கவனித்து தீயணைப்புத் துறை யினருக்கும், காவல்துறையின ருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த  அனைவரும் மயக்கத்துடன் படுத் திருந்தனர். அதில் ராஜன் மட்டும் இறந்த நிலையில் படுக்கை அறைக் க்குள் இருந்துள்ளார். வீட்டில் இருந்த கட்டில் மற்றும் சோபா ஆகியவை  முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதனையடுத்து உயிருக்கு போராடிய ஜெயந்தி மற் றும் அவர்களது மகன்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ள னர்.  இந்நிலையில், இவர்களது வீட்டில் நடைபெற்ற இந்த தீ விபத் தானது சந்தேகத்திற்கு இடமளிக் கும் வகையில் உள்ளதாகவும், வீட்டில் இருந்த அனைவரின் கால்களிலும் மின் ஒயர்களை கோர்க்கும் பிளாஸ்டிக் டேக் கட் டப்பட்டு இருந்ததால் உடுமலை காவல் துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர்.