tamilnadu

img

வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சந்தை வியாபாரிகள்

அவிநாசி, மே. 14 - கொரோனா ஊரடங்கின் கார ணமாக அவிநாசி பகுதியில்  500-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள் ளது. அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் சுமார் 25-க்கும் மேற் பட்ட வாரச்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாரச்சந்தைத் தொழிலாளர்கள் அவரைக்காய், கீரை வகைகள், மளிகைப் பொருட் கள் மற்றும் தின்பண்டங்கள் ஆகிய வற்றை மொத்த விலைக்கு வாங்கி சந்தையில் சில்லறையாக வியா பாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாக வாங்குவதை வழக்கமாக கொண் டிருந்தனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வாரச்சந்தை கள் செயல்பட தடைசெய்யப்பட் டுள்ளதால் அப்பகுதியைச் சார்ந்த 500 -க்கும் மேற்பட்ட வாரச்சந்தை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சந்தை வியாபாரி பாண்டியன் என்பவர் கூறுகை யில், வாரத்தில் ஆறு நாட்களுக்கு மேல் ஒவ்வொரு ஊராட்சி பகுதி களுக்கும் சென்று காய்கறிகள்  விற்பனை செய்வது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் ஊர டங்கு காரணமாக 50 -க்கும் மேற் பட்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இதனால் வியா பாரத்திற்காக சேமித்து வைத்த பணமும் கரைந்து விட்டது . ஆகவே, பாதிக்கப்பட்ட தங்களின் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட  நிர்வாகம் மீண்டும் வாரச் சந்தை செயல்பட உத்தரவிட வேண் டும் என கோரிக்கை விடுத்தார்.