tamilnadu

ஜன.20 - 30: தமிழகத்தில் நீட் எதிர்ப்பு பிரச்சாரம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

திருப்பூர், ஜன. 9 – தமிழகத்தில் ஜனவரி 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி முடிய 10 நாட்களுக்கு நீட் தேர்வு  எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ள இருப்ப தாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். இதுதொடர்பாக திருப்பூரில் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: நம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை பாதிக்கக்கூடிய நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து திருத்தணி வரை திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்எஸ் எஸ் அஜென்டாவை வெளிப்படையாக அமல்படுத்தும் வகையில், குடியுரிமை சட் டத் திருத்தத்தின் மூலமாக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் செயலைச் செய்து வருகிறது. இதனை எதிர்த்து போராடும் மாணவர்களை ஒருபுறம் காவல்துறையை கொண்டும், மறுபுறம் இந்து மதவெறி அமைப்புகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே இடம் இருக்கிறது. ஆனால் அந்த அதிகாரம் மத் திய அரசின் கையில் உள்ளது. அதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். வெறுமனே சட்டமன் றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட் டைக் குடியுரிமைப் பெற்றுத் தருவோம் எனப் பேசினால் மட்டும் போதாது. இவ் வாறு கி.வீரமணி கூறினார்.   முன்னதாக, திருப்பூரில் வியாழனன்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் திருப் பூர் எம்.பி. கே.சுப்பராயனுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக திருப்பூருக்கு கி.வீரமணி வருகை தந்தார்.

;