tamilnadu

img

ஜெய்வாபாய் பள்ளியில் ரூ.35 லட்சத்தில் கலையரங்க காங்கிரீட் தளம் திறப்பு

திருப்பூர், பிப். 18 – இடுவாய் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ஆஸ்திரியா நாட்டின் வியன்னா பகுதியைச் சேர்ந்த எப்.எல்.டெக்ஸ்டைல்ஸ் நிறுவன இயக்குநர் ஜார்ஜ் ஸ்லெஸ் 30 பெஞ்சுகளை இலவ சமாக வழங்கினார். திங்கட்கிழமைபள்ளி வளாகத் தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பெஞ்சு வழங்கிய ஜார்ஜ் ஸ்லெஸ், விவேக் பர்னிச்சர் விவேகானந்தன், அவருக்கு உறுதுணையாக இருந்த எஸ்9 டிசைன் இயக்குநர்கள் மதுவா விஜயன், ஜோதிஸ்வரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் இவ்விழா விற்குத் தலைமை தாங்கினார். சரஸ் கிளாத்திங் கம்பெனி இயக்குநர் இரா.தனபாலன், பள்ளியின் தலை மையாசிரியர் எம்.சரவணன், வெட் டுக்காடு நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடு வாய் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சு.பரமசிவம், வார்டு உறுப்பினர்கள் சர்மிளா செல்வ ராஜ் , ஈஸ்வரி ராமசாமி, பூவதி பிரகாஷ், பி.ஈஸ்வரி, மேற்காலத் தோட்டம் ஆர்.நடராஜன், நாட் டாமை என்.குமாரசாமி, முன்னாள் துணைத் தலைவர் எஸ்.மெளன சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.