tamilnadu

img

வேட்டுவபாளையம் குளத்துக்கு தண்ணீர் வர திட்ட அறிக்கை தயாரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

திருப்பூர், செப். 5 - திருப்பூர் மாவட்டம் பல்லடம்  வட்டத்திற்கு உட்பட்ட வேலாயு தம்பாளையம் தடுப்பணையை சீர் செய்து வேட்டுவபாளையம் குளத்துக்கு நீர் வரவழைக்க விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கும் படி அதிகாரிகளுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழ னிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மங்கலம் சாலை வேலாயு தம்பாளையத்தில் நொய்யல் ஆற் றின் நடுவில் தடுப்பணை அமைந் துள்ளது. இந்த தடுப்பணை பல ஆண்டு காலமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி இந்த தடுப் பணையை நேரில் பார்வையிட் டார். அப்போது சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.நடராஜன், ப.கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேலாயுதம்பாளையம் தடுப்ப ணையை புனரமைக்கும் பணிகள் குறித்தும், செங்கரைப் பள்ளம் ஓடை மற்றும் அஹ்ரகாரப் புத்தூர் வழியாக திருப்பூர் தெற்கு வட்டத் திற்குட்பட்ட வேட்டுவபாளையம் குளத்திற்கு வரத்து கால்வாய் வழியே தண்ணீர் கொண்டு செல் வது குறித்தும் விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்களை அவர் கேட்டறிந்தார். மேலும், இப் பணிகளை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய  வேண்டும் என்றும் அலுவலர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவு றுத்தினார். கடந்த மாத கடைசியில் நடைபெற்ற விவசாயிகள் குறை  தீர்க் கூட்டத்தில் வேட்டுவபாளை யம் குளத்திற்கு தண்ணீர் வரவ ழைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்த னர். இந்த சூழ்நிலையில் ஆட்சியர் மேற்படி பணிகளை ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயார் செய்ய அறி வுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக் கது. இந்நிகழ்வின் போது வட்டாட்சி யர்கள் சாந்தி (பல்லடம்), மகேஷ்வ ரன் (திருப்பூர் தெற்கு), திருப்பூர் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கன கராஜ், மீனாட்சி, சாமளாபுரம் பேரூ ராட்சி செயல் அலுவலர்.ர.பால சுப்பிரமணியன், விவசாயிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

;