திருப்பூர், டிச. 10- மனித உரிமை தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு குழந்தைகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மற்றும் மனித சங்கிலியை சேவ் அமைப்பு செவ்வாயன்று நடத்தியது. சேவ் அமைப்பின் செயல் இயக்குநர் அ.வியா குலமேரி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அப்போது, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதின் அவசியம் பற்றியும், வெளி மாநில குழந்தைகளின் கல்வி, மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக முயற்சிகள் மேற்கொண்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார். தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் விஜயகுமார் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பேசுகை யில், குழந்தை உரிமையும், மனித உரிமையே என் பதை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் 118 சிறப்பு பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். காவல் துறை அதிகாரிகள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சேவ் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.