tamilnadu

ரூ.7 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, மே 27- சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில்  ரூ.7 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. அவிநாசியை அடுத்த சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 300 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,950 முதல் ரூ.6,100 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,500 முதல் ரூ. 5,740 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,090 முதல் ரூ.5, 280 வரையிலும் ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

;