tamilnadu

img

தியாகிகள் நினைவு ஜோதி பயணக்குழுவுக்கு நீலகிரி, திருப்பூரில் உற்சாகமான வரவேற்பு

திருப்பூர், ஜன. 19 – சென்னையில் ஜனவரி 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை  நடைபெற இருக்கும் சிஐடியுவின் 16ஆவது அகில இந்திய மாநாட் டுக்கு செல்லும் தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழு வுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. சின்னியம்பாளையம் தியாகி கள் நினைவிடத்தில் இருந்து சனி யன்று புறப்பட்ட தியாகிகள் ஜோதி பயணக் குழு நீலகிரி மாவட் டத்தின் வழியாக ஞாயிறன்று திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தந்தது. ஜனவரி 19 தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கும் நிலை யில், திருப்பூரில் ஆஷர் மில் பழனிச் சாமி, சீராணம்பாளையம் பழனிச் சாமி, கேத்தம்பாளையம் பன்னீர் செல்வம் மற்றும் இடுவாய் கே. ரத்தினசாமி ஆகிய தியாகிகளின் நினைவு ஜோதி அந்தந்த தியாகி கள் நினைவிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் எதிரில் ஞாயிறன்று மாலை அகில இந்திய மாநாட்டு தியாகி கள் ஜோதி பயணக்குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. இந்த பயணக்குழுவுக்குத் தலைமை ஏற்று வந்த சிஐடியு மாநிலச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் நீல கிரி ஆல்துரை, விசைத்தறி சங்கச் செயலாளர் ஜோதிபாசு, ஆனந் தன், நீலகிரி பொன்னு, முகமது ரபீக் மற்றும் இப்பயணக்குழுவு டன் இணைந்து வந்த பிரச்சார கலைக்குழுவைச் சேர்ந்த பாடகர் கள் துரையரசன், ரமேஷ் உள்பட இக்குழுவில் வந்தவர்கள் அனை வருக்கும் துண்டு அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலை வர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்து அகில இந்திய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து வரவேற்புக்குழு தலை வர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்டுமான சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார், விசைத் தறி சங்க மாநிலத் தலைவர் பி.முத் துசாமி, சங்க நிர்வாகிகள் எம்.ராஜ கோபால், ப.கு.சத்தியமூர்த்தி, சி. மூர்த்தி, ஜி.சம்பத், செல்லதுரை, ஈஸ்வரமூர்த்தி, எம்.பாக்கியம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சம்சீர் அக மது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அவிநாசி தாலுகா திருமுருகன் பூண்டியில் தியாகிகள் ஜோதி பயணக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு பனியன் சங்கப் பொருளாளர் ஆ. ஈஸ்வரமூர்த்தி தலைமை ஏற்றார். ஜோதி பயணக்குழுத் தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி சிஐடியு அகில இந்திய மாநாடு மற்றும் அதன் அர சியல் முக்கியத்துவம் குறித்து எடுத் துரைத்தார். இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்பூரைத் தொடர்ந்து ஊத் துக்குளி ஆர்.எஸ். பகுதியில் தியா கிகள் நினைவு ஜோதி பயணக்கு ழுவுக்கு சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.கந்தசாமி தலை மையில் வரவேற்பு அளிக்கப்பட் டது. இதில் ஏராளமான தொழிலா ளர்கள் பங்கேற்றனர். இதே போல் அவிநாசி அருகே பூண்டி பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே விபி.தெரு அருகில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் கே. சுந்தரம், செயலாளர் ஆர்.ரமேஷ், பொருளாளர் ஏ.நவீன்சந்திரன் மற்றும் பிஎஸ்என்எல்இயு நிர் வாகி கே.ஆர்.ரவி உள்ளிட்ட திர ளான தொழிலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்ன தாக இப்பயணத்தில் நீலகிரி மாவட்ட தியாகிகள் கே.ராஜன், ஜி.சுரேஷ், எஸ்.சின்னதுரை, பீமன், சுஞ்சன் மற்றும் எஸ்.தியாக ராஜன் ஆகியோர் ஜோதியும் இணைந்தது.  மேட்டுப்பாளையத்தில் பொது  தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தியாகிகள் ஜோதிக்கு வரவேற்ப ளிக்கப்பட்டது.

;