tamilnadu

img

அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக அரசு ஊழியர் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கம்

அவிநாசி, நவ.13- அரசு துறைகளில் காலியாக உள்ள நாலரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பில் அவிநாசி  அருகே வட் டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56ஐ ரத்து செய்திட வேண்டும். அரசு துறைகளில் அவுட்சோர் சிங் முறையை மாற்றி, ஆட்குறைப்பு நடவ டிக்கையை கைவிட வேண்டும். அரசு துறை களில் காலியாக உள்ள நாலரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கம் சார்பில் மாநிலம் முழுவதும் மக்கள் சந் திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வரு கிறது. இதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பரமேஸ் வரி தலைமையில் நீலகிரியில் இருந்து புறப்பட்ட பிரச்சார பயணக் குழு அவிநாசி பகுதிக்கு புதன்கிழமை வந்தடைந்தது.  இப்பிரச்சார பயணக் குழுவிற்கு அவிநாசி யில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு ஊழியர் சங்க   மாவட்ட இணைச்செயலாளர் ராமன், வட்ட கிளை தலைவர் பி. ரமேஷ் குமார், வட்ட கிளை செயலாளர் கருப்பன், வட்ட கிளை  துணைத்தலைவர் பரமேஸ்வரன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். இதில் திரளானோர் கலந்து கொண்ட னர்.

;