tamilnadu

அமராவதி சர்க்கரை ஆலையை இடை நிற்காமல் இயக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 25 – அமராவதி சர்க்கரை ஆலையை இடை நிற்காமல் தொடர்ந்து இயக் குவதற்கு நடவடிக்கை எடுத்து கரும்பு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர். இது தொடர்பாக வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங் கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பாலதண்டபாணி கூறியதாவது, அமராவதி சர்க்கரை ஆலையில் கடந்த 2018 -19ஆம் ஆண்டில் 1 லட்சத்து 28 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. ஆலை 86 நாட்கள் இயக்கப்பட்டது. மோச மான பராமரிப்பு, நிர்வாகக் கார ணங்களால், முதன்மையாக 11 சதவிகித பிழிதிறன் கொண்டிருந்த சர்க்கரை ஆலை தற்போது 7.9 சதவிகிதமாக குறைந்துவிட்டது. விவசாயிகளுக்கும் உரிய பலன் கிடைப்பதில்லை. ஏற்கெனவே 75 ஆயிரம் டன் கரும்புக்கு உரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 75 ஆயிரம் டன் கரும்புக்கு உரிய பாக்கி தரப்படவில்லை.  இத்துடன் 1 லட்சம் டன் கரும்பு பதிவு செய்து விவசாயிகள் காத்தி ருக்கும் நிலை உள்ளது. தற்போது போதிய ஊழியர் கள், அலுவலர்கள், களப்பணி யாளர்கள் இல்லை. எனவே உரிய ஏற்பாடுகள் செய்து இந்த சர்க் கரை ஆலையை அடுத்த ஆண்டு இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து இயக்குவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அமராவதி பாசன கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக் கப்படுவார்கள் எனக் குறிப்பிட் டார். இதைத்தொடர்ந்து விவசாயி ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: அம ராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மாநில அரசின் ஊக் கத்தொகை வழங்க வேண்டும். ஒரு டன்னுக்கு ரூ.137 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஆனால் பல மாதங்கள் ஆன பின்னும், இன்னும் ஊக்கத் தொகை கிடைக்கவில்லை. தற் போது 2000 ஏக்கரில் பயிர் செய்யப் பட்டுள்ளது. நடப்பு ஆண்டுகள் விவ சாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஆனால் ஆலை தொடர்ந்து இயங் குமா என்கிற சந்தேகம் எழுகிறது. ஆகவே சர்க்கரை ஆலையில் பார மரிப்புப் பணிகளை மேற்கொள்வ துடன், அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலை தொடர்ந்து இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசா யிகள் இந்த ஆலையை நம்பித்தான், கரும்பு பயிரிட்டுள்ளனர். ஆகவே ஆலை தொடர்ந்து இயங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டார்.

;