tamilnadu

கண்வலி விதை விலையை குறைத்து விற்பதில்லை: விவசாயிகள் சங்கம் முடிவு

திருப்பூர், ஜன. 23 –  கண்வலி விதையை கிலோ ரூ.2 ஆயிரத் துக்கு குறைவாக விற்பதில்லை என தமிழ் நாடு செங்காந்தள் விதை விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு செங்காந்தள் விதை விவ சாயிகள் சங்கத்தின் முதன்மை ஒருங்கி ணைப்பாளர் பழ.ரகுபதி வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது,திண்டுக்கல் திருப்பூர், கரூர்  மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம்  ஏக்கரில்  கண்வலி விதை பயிர் செய்யப்படுகிறது.  கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி  செய்யப்படும் கண்வலி விதை எனப்படு கின்ற செங்காந்தள் விதைக்கு முறை யான விற்பனைச் சந்தை இல்லை. மிக  அதிக பொருட்செலவில் சாகுபடி செய்யப் படும் விதையை இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக, மிகக் குறைந்த விலையில் ஒரு கருப்புச் சந்தை வியாபாரம் போல் நடத்தி வந்துள்ளார்கள். நடப்பாண்டில், மழையின் காரணமாக  விதை உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. ஆனாலும் கூட, நடப்பாண்டில், விலை யைக் குறைக்க முயற்சி மேற்கொண் டுள்ளனர். பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இனி, கிலோ ஒன்றுக்கு ரூ.  2 ஆயிரத்துக்கு குறைவாக விற்பதில்லை எனவும், விவசாயிகளை மிரட்டி வாங்கும் இடைத்தரகர்களை கருப்புப் பட்டியலில் சேர்த்து, அத்தகைய வியாபாரிகளுக்கு இனி  எப்போதும், விதையை விற்காத நிலையை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், விவசாயிகள், அரசு அதிகாரிகள், கொள்முதல் செய்யும் நிறு வனங்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் ஏற் பாடு செய்யப்பட்டு, அதன் மூலம் ஆண்டு தோறும் விலை நிர்ணயம் செய்யும் முயற்சியை மேற்கொள்ள அரசு ஒரு திட் டத்தை வழங்க தமிழக முதல்வரை சந்திக்க  இருப்பதாகவும் பழ.இரகுபதி கூறி யுள்ளார்.

;