tamilnadu

img

வங்கி நெருக்கடியால் விவசாயி தற்கொலை நீதி கேட்டு விவசாயிகள் ஆவேச போராட்டம்

தாராபுரம், ஜீலை 8 - ஆக்சிஸ் வங்கி நெருக்கடியால் விவசாயி தற்கொலை செய்து  கொண்ட நிலையில், அவரது மரணத் திற்கு நீதி கேட்டு விவசாயிகள் ஆவேச  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபு ரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட குழந்தைபா ளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி(55). இவர் விவசாயத் தேவைகளுக்காக தாராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் கடன் பெற்றிருந்தார். முறையாக கடன் தவணையை கட்டி வந்த நிலையில்,  கொரோனா நோய் தொற்று காரண மாக விளைபொருட்களை விற்க முடியாமல் கடன் தவணை கட்ட  முடியாமல் நெருக்கடியில் இருந் துள்ளார். இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி  மேலாளர் ஆகியோர் விவசாயி ராஜாமணியை தவணை தொகையை  கட்டக்கோரி தொடர்ச்சியாக மிரட் டியும், கடுமையான வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். இதனால் மன முடைந்த விவசாயி ராஜாமணி, பூச்சி மாத்திரைகளை தின்று தற் கொலை செய்து கொண்டார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், விவசாயி ராஜாமணி தற்கொலைக்கு காரணமான வங்கி  ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அவரது கடன் களை தள்ளுபடி செய்து தடை யில்லா சான்று வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்  இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் வங்கிகள் இடையே யான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலை மையில் விவசாய சங்கங்களை உள்ளடக்கிய குழு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி புதனன்று விவசாய சங்கங்களின் கூட்டமைப் பின் தலைமையில் 300 மேற்பட்ட விவசாயிகள் தாராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மாவட்ட உதவி கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், வட்டாட்சியர் கனகராஜ் ஆகியோர் வங்கி நிர்வா கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் வங்கி நிர்வாகம், விவசா யிகள் சங்க நிர்வாகிகளுடன் வரும்  திங்களன்று வட்டாட்சியர் அலுவல கத்தில் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய லாம் எனத் தெரிவித்தனர்.

இதைய டுத்து விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்ட னர்.  முன்னதாக, இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சண்முகசுந்தரம், முத்து விஸ்வநாதன், வழக்கறிஞர் ஈசன், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, சிவக் குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில  செய்தி தொடர்பாளர் முருகானந்தம், உழவர் உழைப்பாளர் கட்சி திருப்பூர்  மாவட்ட தலைவர் ஈஸ்வரமுர்த்தி மற்றும் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வா கிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

;