tamilnadu

அவிநாசியில் ரூ.8.84 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, மே 16-அவிநாசியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.8.84 லட்சத்துக்கு பருத்திஏல வர்த்தகம் நடைபெற்றது.அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 533 மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 முதல் ரூ.6,175வரையிலும், மட்ட ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் ரூ.8.84 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

;