tamilnadu

ரூ.32.34 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, மார்ச் 4- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.32.34 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு சத்திய மங்கலம், மைசூர், பேராவூரணி, தருமபுரி, பென்னாகரம், புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 2,321 பருத்தி மூடைகள் வந்திருந்தது. இதில், 250 விவசாயி களும், 14பருத்தி வியாபரிகளும் கலந்து கொண்டு, டிசிஎச் ரகப் பருத்தி குவின்டால் ரூ.6,000 முதல் ரூ.7,040 வரையி லும், ஆர்சிஎச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.4,500 முதல் ரூ.5,400 வரையிலும், மட்டரகம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலும் ஏலத்தில் எடுத்தனர். இதில் மொத்தம் ரூ.32.34 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

;