அவிநாசி, ஜூன் 20- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வரு கிறது.
அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில்ரூ.35 லட்சத்து 13 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.
இதில், மொத்தம் 3 ஆயி ரத்து 40 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச்.பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4000 முதல் ரூ.4650 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2000 வரையிலும் ஏலம் போனது.