tamilnadu

img

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம், பிப்.20 - மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரத்தில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரத்தில் அண் ணாசிலை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், மத்திய அரசால் தாக் கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நாட்டின் செல்வ வளங்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு அனுமதியளிப்ப தற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.  மேலும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலனை பாது காக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. சிறு குறு நடுத்தர தொழில் களை அழிவிலிருந்து மீட்க நட வடிக்கை இல்லை. கல்வி, சுகா தாரம்,  குடிநீர், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மிக குறைந்த ஒதுக் கீடு, தமிழக ரயில்வே திட்டங்க ளுக்கு மிக சொற்பமான ஒதுக்கீடு, எல்ஜசி உள்ளிட்டவற்றை தனியா ருக்கு தாரைவார்ப்பு,  ஜவுளித்தொ ழிலை பாதுகாத்திட எந்த திட்டமும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி கண்டன முழக்கமிடப்பட்டது.  முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

;