tamilnadu

img

ஆவின் நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் பாலை சாலையில் கொட்டிப் போராட்டம்

திருப்பூர், ஆக. 6 - திருப்பூரில் விவசாயிகளிடம் கொள் முதல் செய்யும் பாலில் 20 சதவிகி தத்தை திருப்பி கொடுத்து விடுவதுடன், கொழுப்புத் தன்மை குறைவாக இருக் கிறது என சொல்லி கொள்முதல் விலை யையும் குறைப்பதைக் கண்டித்து விவசாயிகள் சாலையில் பாலைக் கொட்டிப் போராட்டம் நடத்தினர். தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வீரபாண்டி ஆவின் பால் குளிரூட்டு நிலையம் முன்பாக வியாழனன்று இந்த போராட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற விவசா யிகள் ஆவின் நிர்வாகம், பால் கூட்டுறவு சங்கங்களிடம் முழுமையாக பால் கொள்முதல் செய்யாமல் 20 சதவிகி தத்தைத் திருப்பி அனுப்புவதுடன், கொள்முதல் செய்த பாலிலும் டிடிஎஸ் எனப்படும் கொழுப்புத்தன்மை குறைவாக இருக்கிறது என்று சொல்லி, கொள்முதலுக்கான விலையையும் குறைத்து விவசாயிகளுக்குக் கொடுக் கின்றனர். ஏற்கெனவே ஊரடங்கு கார ணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயி கள் ஆவின் நிர்வாகத்தின் இந்த பார பட்சமான நடவடிக்கை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி சாலையில் பாலைக் கொட்டி கண் டன முழக்கம் எழுப்பினர்.

;