tamilnadu

img

தொழிற்துறையை புரட்டிப்போடும் கொரோனா கருணை காட்டுமா மத்திய அரசு- எதிர்பார்ப்பில் தொழில்முனைவோர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பொரு ளாதார மந்தம் ஆகியவற்றின் காரணமாக ஏற்கனவே கடுமையான பாதிப் பில் சிறுகுறு தொழிற்துறையினர் பாதித்து வருகின்ற நிலையில் தற்போது கொரோனா  வைரஸ் அச்சுறுத்தல் தொழிற்துறையின ருக்கு கலக்கத்தை உருவாக்கியுள்ளது. லட்சக் கணக்கான தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக வரிச்சலுகைகள், வங்கி தவனைகளில் கெடு பிடி ஆகியவற்றை தளர்த்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை தொழிற்துறையினர் முன்வைத்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய ஆபத்தில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. எதனையும் ஒன்றுபட்டு போராடி வெற்றிபெற வேண்டும் என்கிற அறைகூவல் இந்த கொரோனா விவ காரத்தில் மட்டும் ஒவ்வொருவரும் தனித்து இருக்க அறிவுறுத்தப்படுவது முரண் என்றா லும் இதுவே நிவாரணம் என்கிற நிலை.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, 144 தடை அமலாக உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் கூடங்கள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுகின்றன. இதனிடையே கொடிசியா, டேக்ட், கோப்மா உள்ளிட்ட 13 தொழில் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து செவ்வாயன்று கோரிக்கை மனு அளித்தனர். இதில் கோவையில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள்  31 ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜீன் மாதம் வரை தொழிற்கூடங்கள் மூடல் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தொழில் அமைப்பினர் தெரிவித்தனர். ஏற்கனவே பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்கள் நலிவடைந்துள்ள நிலையில், கொரோனா மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதால் வங்கிக்கடன், ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்டவை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.  இதேபோல மின் கட்டணம் செலுத்தவும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர்.

 

ஊர டங்கு, சுய ஊரடங்கு, 144 தடை என்று பல் வேறு உத்தரவுகள் அரசு தரப்பில் இருந்து பிறப்பிக்கப்பட்டே இருக்கிறது.உயிர்ப்பலி களை தடுக்க வேண்டும் என்கிற அக்கறை யில் இருந்து இதுபோன்ற உத்தரவுகள் வெளி யிடப்படுகிறது என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கின்றனர். ஆனால் ஒரு நாள் என்பது பல நாட்கள் ஊரடங்கு என்கிற நிலையில் உழைப்பு என்கிற மூலதனத்தை நம்பியே வாழ்க்கையை நகர்த்தும் தொழிலாளிகளின் நிலைதான் கொரோனா அச்சுறுத்தலை விட பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர் களுக்கான நிவாரணத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்து வருகிறது. பல லட்சம் கோடி மதிப்பிலான வணி கத்தையும், வியாபாரத்தையும் பாதித்துள்ள கரோனா, பல கோடி தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் குறைவுதான் என்றாலும் தற்போது பொருளா தார ரீதியாக கொரோனா தந்துள்ள பாதிப்போ மிகவும் அதிகம். உள்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் ஏற்கெனவே சுணக்கத்தில் இருந்த தொழில் துறையினரை மேலும் ஆட்டிப் பார்த்து வருகிறது கொரோனா.

முந்தைய மந்த நிலையில் தப்பித்த ஒரு சில தொழில் துறைகளும் இப்போது தப் பிக்க முடியவில்லை என்பதே பெரும்சோகம். அடுத்தடுத்த மந்த நிலைக்கு ஆளாகி வரும் பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்க ளுக்கு கடன் தள்ளுபடி வழங்கினால் மட்டுமே தொழில் நிலைக்கும் என்கிறார் கோவை  பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங் கத்தின் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ், கோவையின் தயாரிப்புகள் அண்டை மாநி லங்களுக்கே அதிகம் செல்கின்றன. தற் போது எல்லைகள் மூடப்பட்டிருப்பதாலும், கொரோனா அச்சம் காரணமாக விற்பனை சரிவு, பணப்புழக்கம் பாதிக்கப்பட்டிருப்பதா லும் உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலை கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கடுமையாக ஏற்பட்டுள்ள நிதி  நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கி களில் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றுள்ள குறுந்தொழில்களின் கடன்களை வாராக் கடன்களை தள்ளுபடி செய்ததைப் போன்று தள்ளுபடி செய்ய வேண்டும்.

ரூ.10 லட்சத் துக்கு மேலான கடன்களுக்கான வட்டி, தவ ணைக் காலத்தை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதுடன், 11.50 சதவிகித வட்டியை 4 சத விகிதமாக குறைக்க வேண்டும் என்றார்.  ஜவுளித் தொழில் துறையைப் பொறுத் தவரை இதுவரை பார்க்காத வித்தியாசமான சவாலை எதிர்கொண்டிருக்கிறது என இந் தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கவலை தெரிவிக்கிறார். மேலும் அவர் கூறு கையில், இந்தியாவின் 65 சதவவிகித ஏற்று மதி பொருள்கள் உலகின் 15 நாடுகளுக்கே செல்கிறது. கொரோனாவால் அந்த 15 நாடு களும் பாதிக்கப்பட்டிருப்பதே இந்திய  தொழில் துறையின் மந்த நிலைக்குக் கார ணம். பெரும்பாலான அமெரிக்க, ஐரோப் பிய நாடுகள் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வழங்கிய ஜவுளி ஆர்டர்களை  நிறுத்தி வைத்துள்ளனர். சிலர் ரத்து செய்துள் ளனர், மேலும் சிலரே பின்னர் பார்த்துக்  கொள்ளலாம் என்று ஒத்திவைத்துள்ளனர்.  

கொரோனா தாக்கம் குறைந்துள்ள தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் நிலையை வைத்துப் பார்க்கும்போது வர்த்த கம் இயல்பு நிலைக்குத் திரும்ப 90 முதல் 120 நாள்கள் வரை ஆகும். ஏற்றுமதி இல்லா ததால் தானாகவே ஆடை உற்பத்தி, துணி உற்பத்தி, நூல் உற்பத்தி குறைந்து வேலையி ழப்பு ஏற்படுகிறது. இதனால் இந்தியாவில் அடுத்த காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி  கட்டாயம் இருக்கும். ஏற்றுமதி மீண்டும்  இயல்புக்கு வரும் வரையிலும் தொழில்முனை வோர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் என் றால் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்குவது நம்பிக்கை அளிப்ப தாக இருக்கும். டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசிடம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில் 40 சதவிகித நிறுவனங்க ளுக்கு மத்திய அரசின் உதவி உடனடியாகத் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தோம். கொரோனாவால் அது மேலும் 15 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாகவும் எனவே அவ சரம் கருதி எங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரபு தாமோதரன் வலியுறுத்தியுள்ளார்.  

ஏற்றுமதி பாதிப்புடன் உள்நாட்டு வியா பாரமும் பாதிக்கப்பட்டதால் சிக்கல் உருவாகி யிருப்பதாகக் கூறும் தென்னிந்திய பஞ்சாலை கள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஸ்வின் சந்திரன், இந்த பாதிப்பில் இருந்து மீள ஓராண்டாகும் என்கிறார். ஏற்றுமதி, இறக்கு மதி நிறுத்தம், வணிக வளாகங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளால் ஜவுளிப் பொருள்களுக்கான தேவை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் எதிர்பாராத பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய சூழலில் உள்ளன. ஜவுளித் தொழில் அதிக மூலதனத்தையும் அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கும் துறையாக இருப்பதால், தற்போ தைய சிக்கலான சூழலில் இருந்து மீள அர சின் உடனடி உதவி தேவைப்படுகிறது. எனவே, இந்த இக்கட்டான நிலையில் இருந்து ஜவுளித் தொழில் மீண்டு வர வங் கிக் கடன், வட்டி செலுத்துவதற்கு, ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை அவகாசம் அளிக்க மத்திய அரசு வங்கித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் நெருக் கடிக்குள்ளாகியிருக்கும் தொழில் துறையின ருக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

கோவையில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை கரோனா நெருக்கடியில் இருந்து பாதுகாக்க தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திற னுக்கு ஏற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை உடனடியாக வட்டியில்லாக் கடன்கள் வழங்க வேண்டும். அத்துடன்,  தொழில் முனைவோர்கள் ஏற்கெனவே வாங் கிய கடன்களை திருப்பிச் செலுத்த மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். வட்டி, அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.  கொரோனாவின் பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வரும் வரையிலும் மக்க ளின் நலனை கருத்தில் கொண்டு பொருள் களை ரேசன் கடைகள் மூலம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கி றார்  தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ்.  நாட்டின் மொத்த பம்ப்செட் தேவையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 55  சதவிகிதத தேவையை கோவை நிறுவனங் களே பூர்த்தி செய்கின்றன. கொரோனாவால் விற்பனை,  உற்பத்தியில் பம்ப்செட் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. குறு, சிறு,  நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன், புதிய கடன்கள் மீதான வட்டியை வங் கிகள் குறைப்பதன் மூலம் சரிவை ஓரளவுக்கு சரிகட்ட முடியும்.

அத்துடன் வட்டியில்லாத புதிய கடன்கள் அவர்களின் நடப்பு மூலத னம், கொள்முதல் அல்லது விற்பனை சரக்கு களின் மதிப்புக்கு வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எஃப். தொகையை செலுத்த 6 மாத அவகாசமும், ஜி.எஸ்.டி. செலுத்த 3 மாத அவகாசமும் வழங்க வேண்டும். வங்கிக் கடன் மீதான வட்டி குறைப்பின் மூலம் பம்ப்செட் தயாரிப்பாளர்களின் பிரச்சனையை ஓரள வுக்கு சமாளிக்க முடியும் என்கிறார் தென் னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங் கத்தின் (சீமா) தலைவர் வி.கிருஷ்ணகுமார். வாகனப் போக்குவரத்து தடை செய்தாலே சிறுதொழில்கள் முடங்கும். ஏற்கெனவே மகாராஷ்டிரத்தில் சிறு தொழில்கள் உற்பத் தியை நிறுத்திவிட்டனர். தமிழகமும் அதை நோக்கிப் பயணிக்கிறது என்கிறார் கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தின் (கொடி சியா) தலைவர் ஆர்.ராமமூர்த்தி.  குறுந்தொழில்களின் உற்பத்தி நின்றால் தானாகவே சிறுதொழில்கள் முடங்கும். அதன்படி தற்போது கடுமையான மந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம்.

நாட்டில் உள்ள பெருநிறுவனங்களே சலு கைத் திட்டங்களைக் கேட்கும்போது, வசதி குறைந்த எங்களால் எப்படி இந்த நிலையை சரி செய்ய முடியும். வங்கிக் கடனை திருப் பிச் செலுத்த குறைந்தது 6 மாத அவகாசம் வழங்க வேண்டும். நிதியமைச்சர் ஏற் கெனவே அறிவித்த மூலதனக் கடனை வங்கி கள் இப்போதாவது வழங்க வேண்டும். அப் படி வழங்கினாலாவது வரும் டிசம்பருக்குள் நிலைமையைச் சரி செய்துவிடலாம் என்கி றார் ராமமூர்த்தி. கோவையில் சுமார் 3,200 கிரில் தொழில்முனைவோர்கள் உள்ளனர். இவர் களிடம் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு மாத மாக நிலவும் கெதரோனா வைரஸ் அச்சம் காரணமாக தொழில் நலிவடைந்துள்ளது. எனவே வங்கிக் கடன் பெற்றுள்ள தொழில் முனைவோர்கள் கடனை திருப்பிச் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்கி றார் கிரில் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் திருமலை ரவி. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்க ளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல்,  எதிர்பாராத நெருக்கடியால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து மீண்டு வரும் வரையிலும், நாங் கள் தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக மீனவர்க ளுக்கு வழங்கப்படுவதைப் போலவே எங்க ளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகா சம் அளிக்க வேண்டும் என்கிறார் அவர். மூலப் பொருள்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., உயர் மதிப்பு ரூபாய் நோட் டுகள் மதிப்பிழப்பால் ஏற்பட்ட மந்தம் போன்றவற்றை அடுத்தடுத்து சந்தித்துக் கொண்டிருக்கையில் கொரோனா பரவல் தொழில் துறையை மீண்டும் கடுமையாகத் தாக்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள எடுத்துவரும் நடவடிக்கையின் ஒருபகுதியாக தொழிற்துறையின் நலனை யும் கருத்தில் கொள்ள வேண்டும். வைரஸ் தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிறகு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேலை வேண்டும். வேலை வேண்டும் என் றால் தொழில் வேண்டும். அந்த தொழிலை பாதுகாக்க இப்போதே அதற்கான நடவ டிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதே தொழிற்துறையினரின் எதிர்பார்ப்பு. அ.ர.பாபு

;