tamilnadu

இரண்டாம் நாளாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

திருப்பூர், ஆக. 26 – பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியை உடன டியாக வழங்க வலியுறுத்தி இரண்டாம் நாளாக தமிழகத்தின் பல பகுதிகளில் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டனர். ஒப்பந்த ஊழியர்களுக்குக் கடந்த 12 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், ஆட்குறைப்பு என்ற பெயரில் கடந்த 20 வருடங்களாக பணிபுரியும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புத னன்று இரண்டாம் நாளாக பிஎஸ்என் எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதனன்று உண்ணாவிரதம் மேற் கொண்ட தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினருக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தினரும் கலந்து கொண்டனர். மேலும் இப்போராட்டத்தில் இரு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோட்டில் முதன்மைப் பொதுமேலா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண் ணாவிரதப் போராட்டத்திற்கு பிஎஸ் என்எல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஆர்.காளிமுத்து தலைமை தாங் கினார். ஏஐபிடிபிஏ மாநில உதவிச் செய லாளர் பரமேஸ்வரன், மாநில அமைப்புச் செயலர் சி.பரமசிவம், மாவட்ட செயலாளர் வி.மணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

 கோவை

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவ லகத்தில் நடைபெற்ற இரண்டாவது நாள் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்தி ரன் தலைமை தாங்கினார். இதில் ஊழி யர் சங்க மாநிலச் செயலாளர் பாபுராதா கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் மகேஷ்குமார், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அன்பு, செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத் திற்கு தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் கிளைத் தலைவர் சிவகுருநாதன் தலைமையேற் றார். இப்போராட்டத்தை அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு இலாகா ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் வி.மகேஸ்வரன் துவக்கி வைத்தார். மேலும், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.விஜயகுமரன், முன்னாள் மாவட்ட உதவிச் செயலாளர் ஆர்.ரமேஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் ஆர்.பசுபதி, சாதிக் செரீப் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

சேலம்  

சேலத்தில் முதன்மைப் பொதுமேளா ளர் அலுவலகத்திலும் அனைத்து பிஎஸ் என்எல் கிளைகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாந கரப் பகுதியில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் இ.கோபால், ஒப்பந்தத் தொழிலாளர் கள் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

;