tamilnadu

ஜன.8 திருப்பூரில் பொதுவேலை நிறுத்தம் கடையடைப்பு நடத்த அனைத்து கட்சிகள் முடிவு

திருப்பூர், டிச. 31 – ஜனவரி 8ஆம் தேதி மத்திய தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தின்போது கடையடைப்புப் போராட்டம் நடத்துவது என்று திருப்பூரில் அனைத்துக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்தில் செவ்வாயன்று திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில்  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, காங்கிரஸ் சார்பில் கோபால், முத்து,  மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சு. சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில் மத்தியில் ஆளும் மோடி  தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து  நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற் சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பேராதரவு தருவது என முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாநகரில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி முடிய உழவர் சந்தை, பள்ளி நடை மைதானம், பிரதான வீதிகளில் உள்ள தொழிற்சாலைகள், கடைகளில் துண்டறிக்கைகள் கொடுத்து பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாநகரில் உள்ள அனைத்து தொழில், வர்த்தக நிறுவனங்கள் ஜனவரி 8 ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் மாலை  6 மணி வரை ஒரு நாள் கடையடைப்பு செய்து போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்  என வேண்டுகோள் விடுக்க முடிவு செய்யப் பட்டது. அன்றைய தினம் திருப்பூர், அவி நாசி, ஊத்துக்குளி, காங்கேயம், தாரா புரம், உடுமலை, பல்லடம் ஆகிய ஏழு மையங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி களின் உறுப்பினர்களும், ஆதரவாளர் களும், அனுதாபிகளும் பங்கேற்பது என்றும்  முடிவு செய்யப்பட்டது. அனைத்துத் தரப்பு  மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கு மாறு அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில்  கேட்டுக் கொள்ளப்பட்டது.

;