tamilnadu

கண்காணிப்பு கேமரா அமைக்க ஆலோசனைக் கூட்டம்

அவிநாசி, ஜூன் 8- அவிநாசி அடுத்த சேவூர்  சுற்றுவட் டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சேவூர் காவல்துறையின் சார்பில்   தனியார் திருமணமண்டபத்தில் சனி யன்று நடைபெற்றது. அவிநாசி அடுத்த சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், மளிகைக் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இப்பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு சேவூர் காவல் நிலைய ஆய்வாளர் சம்பங்கி தலைமை தாங்கினார். துணை ஆய்வாளர் ஜெகநாதன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், நிதி  நிறுவனங்களின்  உரிமையாளர்கள், பின்ன லாடை உரிமையாளர்கள், வங்கி முகவர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக் கூட்டத்தில் சேவூர் காவல் நிலைய  கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சந்தை பாளையம், கைகாட்டி பிரிவு, கோபி சாலை, புளியம்பட்டி சாலை,  அவிநாசி சாலை  ஆகிய பகுதிகளில் 19 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கேமராக்கள் பொருத் தப்படும் செலவினை  நிதிநிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பின்ன லாடை உரிமையாளர்கள், அனைத்து வங்கி  முகவர்கள் தருவதாக தெரிவித்தனர்.