திருநெல்வேலி:
முழுமையான போனஸ் கேட்டு நெல்லை தாமிரபரணி டெப்போ முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியுமாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி,எச்.எம்.எஸ். மாநில துணை தலைவர் சுப்ரமணியன், ஏஐடியூசி உலகநாதன், டிடிஎஸ்அப் சந்தானம் மற்றும் ஐஎன்டியூசி நிர்வாகிகள்போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் குறித்து பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.