tamilnadu

சிறப்பு கைவினை பயிற்சி வகுப்பு

திருநெல்வேலி, ஆக.17- நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாய கர் உருவம் செய்யும் சிறப்பு கைவினை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சியை கலை ஆசிரியர் கார்த்தீஸ்வரி நடத்தினார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் பயிற்சி நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவியர், மகளிர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாட்டி னை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி மேற்கொண்டார்.