tamilnadu

பெருமணல் கடலில் மூழ்கிய மாணவரின் உடல் மீட்பு

திருநெல்வேலி, ஜூன் 1- நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கடற்கரை கிராமத்தில் ஞாயிற்றுகிழமை கடலில் குளிக்கும்போது காணாமல் போன பொறியியல் மாணவர் காட்வின் உடல் திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டது. கடலிலிருந்து பெருமணல் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட காட்வின் உடலை பார்த்து ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கதறி அழுத னர். மக்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவே காட்வின் உடல் பிரேத பரிசோத னைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆசாரிப்பள்ளம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிந்து அதன் பின்னரே பிரேத பரிசோதனை நடை பெற்று அடக்கம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதா தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.