tamilnadu

ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் ஜாக்டோ-ஜியோ முதல்வருக்கு மனு

திருநெல்வேலி, ஜூலை 30- 17-பி ஒழுங்கு நடவடிக்கை களை ரத்து செய்யக் கோரி ஆட்சி யர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, கல்லூரிக் கல்வி மண் டல இணை இயக்குநா் மூலம் முதல்வருக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மனு அளித்தனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப் பின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி தலைமையில் 17-பி ஒழுங்கு நட வடிக்கைகளை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு ஆட்சியா் ஷில்பா பிரபாகர், மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரி செந்திவேல் முருகன், கல்லூரிக் கல்வி மண் டல இணை இயக்குநர் பூா்ண சந்திரன் ஆகியோர் மூலம் மனு அனுப்பப்பட்டது. முன்னதாக ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ -ஜியோ இணை ஒருங்கிணைப்பா ளர்கள் மாரி ராஜா, ஆதி் சார்லஸ் நீல், முருகானந்த ராஜா, கோமதி நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ராஜ்குமார், பெரிய துரை, ப்ளசிங் பாக்கியராஜ், சோ. முருகேசன், அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள ஆசிரியா்கள், அரசு ஊழி யர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, பழைய ஓய்வூ தியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரி க்கைகளை நிறைவேற்றிட வலி யுறுத்தி, கடந்த ஆண்டு 22-1-2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை மேற் கொண்டது.அப்போது தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்றும் பொதுமக்கள், மாணவா் நலன் கருதியும் அரசுப் பணிகள் முடங்குவதால் அரசுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண் டும் வேலை நிறுத்தத்தை கடந்த 30-1-2019 அன்றே தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு ஆசிரியர் களும் அரசு ஊழியா்களும் திரும்பினர்.

குற்றக் குறிப்பாணைகள் 17(பி) நிலுவையில் உள்ளதால் பதவி உயா்வும், ஊதிய உயர்வும், பணி ஓய்வும், பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன் களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனா். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் ஜாக்டோ ஜியோ சார்பாக பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும், தமிழக அரசு ஆசிரியர்-அரசு ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை களை ரத்து செய்து, ஒரு சுமுக மான சூழ்நிலையினை உருவாக் காமல் இருப்பது ஆசிரியா்-அரசு ஊழியா்களிடையே கடுமையான அதிருப்தியினையும் வேதனை யையும் ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

;