திருநெல்வேலி, மார்ச் 3- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனுமதி இல்லாமல் செய ல்பட்ட 46 குடிநீர் ஆலை களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் நிலத்தில் இருந்து அளவுக்கு அதிக மாக தண்ணீர் உறிஞ்சி எடு ப்பதாகவும், இதனால் நில த்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்ப ட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்‘ வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அனுமதி இல்லாமல் இயங்கி வரும் ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தர விட்டது. அதன்பேரில் மாநி லம் முழுவதும் அதிரடி சோத னை நடத்தப்பட்டு வருகி றது. அனைத்து மாவட்டங்க ளிலும் அதிகாரிகள் தொட ர்ந்து ஆய்வு செய்து வருகி றார்கள். பொதுப்பணித் துறையின்கீழ் உள்ள நிலத்தடி நீர் ஆதாரத்துறை யின் நிலத்தடி நீர் எடுத்தல் பிரிவின் நெல்லை மண்டல நிர்வாக பொறியாளர் தலை மையில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் திங்களன்று ஆய்வு செய்தனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது. நெல்லை மாவ ட்டத்தில் மொத்தம் 48 குடி நீர் ஆலைகள் உள்ளன. அனைத்து ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தில், 12 ஆலைகள் உரிமம் இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், 8 ஆலைகளின் உரிமம் புதுப்பி க்கப்படவில்லை. அந்த 20 ஆலைகளுக்கும் அதிகாரி கள் அதிரடியாக ‘சீல்‘ வைத்தனர். இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறையை சேர்ந்த அதிகாரி கூறுகையில், பொதுப் பணித்துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதார த்துறையின் நெல்லை மண்டல அலுவலகம் பாளை யங்கோட்டையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் கட்டு ப்பாட்டின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்க ளில் ஆய்வு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 48 குடிநீர் ஆலைகளில், உரிமம் இல்லாத 20 ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் மொ த்தம் 34 ஆலைகள் உள்ளன. அதில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 11 ஆலை களுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்ட த்தில் 57 குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 15 ஆலைக ளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவ ட்டங்களில் மொத்தம் 46 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது என்றார்.