திருநெல்வேலி, மே 17- கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிற ப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியா வசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற கார ணங்களுக்காக வெளியே வரவேண்டாம் என வும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 1833 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2403 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 7705 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.