tamilnadu

img

பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணக்குழுவிற்கு மணப்பாறை, கரூரில் வரவேற்பு

திருச்சி/கரூர், ஜன.23- சிஐடியு 16 வது அகில இந்திய மாநாடு சென்னையில் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறு கிறது. அதையொட்டி திருச்சி பொன்மலையில் இருந்து பொன் மலை தியாகிகள் ஜோதி பய ணக்குழு சிஐடியு மாநில துணைச் செயலாளர் சிங்காரவேலு, ஐடா ஹெலன் தலைமையில் கடந்த செவ்வாய் கிழமை புறப்பட்டது. மணப்பாறை வந்த ஜோதி பய ணக்குழுவினருக்கு சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கூட்டத்திற்கு தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் எஸ் எம். ஷாஜகான் தலை மை தாங்கினார். தையல் தொழி லாளர் சங்க மாநில பொதுச்செய லாளர் ஐடாஹெலன், சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செய லாளர் எஸ்.ரெங்கராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாவட்ட தலைவர் பன்னீர்செல் வம், மாவட்ட பொருளாளர் சம்பத், கரூர் மாவட்ட தலைவர் முரு கேசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.  சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மணப் பாறை வட்டச் செயலாளர் ராஜ கோபால், மருங்காபுரி தாலுகா செயலாளர் தியாகராஜன், மருங்காபுரி சிஐடியு தலைவர் அழகர்சாமி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாலு, போக்கு வரத்து சங்கத்தலைவர் துரை ராஜ், மின் ஊழியர் சங்க தலை வர் அந்தோணி, செயலாளர் ரியா சுதீன், துணைத்தலைவர் கண் ணன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் நவமணி கலந்து கொண்டனர். விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட துணை செய லாளர் எம்.கண்ணன் நன்றி கூறினார்.

ஜோதி பயணக்குழுவிற்கு, துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமையில் வரவேற்பு அளிக் கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்து ராஜ், சிஐடியு சந்திரசேகர், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செய லாளர் ரவி, பொருளாளர் சுப்ர மணி, தரைக்கடை வியாபாரிகள் ஒன்றிய செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முசிறி கைக்காட்டி அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி க்கு தையல் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித் தார். சிபிஎம் மணப்பாறை ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், பொருளாளர் சம்பத், ஆட்டோ ஊழியர் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

கரூர்

கரூர் மாவட்டத்திற்கு வந்த பயணக்குழுவிற்கு சிஐடியு சங்க மாவட்ட குழு சார்பில் கரூர் பேருந்து நிலையம் ஆர்எம்எஸ் தபால் அலுவலகம் முன்பு உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  கூட்டத்திற்கு சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியு சங்க அகில இந்திய மாநாட்டின் நோக் கங்களை விளக்கி பயணக்குழு வின் தலைவர் ஆர்.சிங்காரவேலு சிறப்புரையாற்றினார். சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முரு கேசன், இன்சூரன்ஸ் ஊழியர் சங் கம் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் வி.கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் எம்.சுப்பிரமணியன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. கந்த சாமி ஆகியோர் பேசினர்.  பயணக்குழுவிற்கு சிஐடியு மற்றும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கைத்தறி ஆடைகள் அணிவிக்கப்பட்டன.  இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
 

;