கும்பகோணம் ஜூலை 6- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் திருப்புவனம் பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ30 ஆயிரம் மதிப்புள்ள வண்ண தொலைக்காட்சி பெட்டியை பள்ளியின் பயன்பாட்டுக்காகவும் மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்காகவும் திருபுவனம் அதிமுக நகர செயலாளரும் திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவருமான சிங் எஸ்.செல்வராஜ் தனது சொந்த செலவில் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஏவிகேஅசோக்குமார் பாலமுருகன் முருகன் சுந்தர் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் எஸ்வைரவேல் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.