tamilnadu

img

திருச்சி பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸ் 112-வது ஆண்டு விழா

திருச்சிராப்பள்ளி: திருச்சி பாலக்கரையில் உள்ள பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் கடையின் 112 வது ஆண்டு விழா வியாழனன்று நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, கடையின் உரிமையாளர் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திமுக தலைமை கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கடை உரிமையாளர்கள் பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், வினோத், சாரு மற்றும் மாநகர திமுக செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.